சினிமா

'2.0' டீசர் எப்போது?: ஷங்கர் ட்விட்

'2.0' டீசர் எப்போது?: ஷங்கர் ட்விட்

webteam

'2.0' டீசர் எப்போது வெளியாகும் என்று ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் நடிப்பில் அக்ஷய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படம்‘2.0’. இப்படத்தின் டீசர் சம்பந்தமான பணிகள் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சலில் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் அதற்கான வேலைகள் முடிவடைந்த உடன் விரைவில்  டீசர் வெளியிடப்பட உள்ளதாகவும் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

விஎஃப்எக்ஸ் வேலைகள் காலதாமதமாவதால் ஜனவரி மாதம் வெளியாக இருந்த இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் தள்ளிப்போனது. குறிப்பிட்ட தேதியில் பணிகளை முடித்து தராததால் ஹாலிவுட் நிறுவனம் மீது படக்குழு வழக்குத் தொடர இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அவ்வாறு எந்த வழக்குப் போடப் போவதில்லை தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் விரைவில் டீசர் வெளியாகும் என ஷங்கர் கூறியிருப்பதால் படமும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.