சினிமா

’2.ஓ’ ஷூட்டிங் ஓவர்: எமி ஜாக்சன் மகிழ்ச்சி

’2.ஓ’ ஷூட்டிங் ஓவர்: எமி ஜாக்சன் மகிழ்ச்சி

webteam

இரண்டரை வருடமாக நடந்த ’2.ஓ’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக அந்தப் படத்தில் நடித்துள்ள எமி ஜாசன் தெரிவித்துள்ளார். 

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘2.ஓ’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பாடல் வெளியீடு துபாயில் வரும் 27-ம் தேதி நடக்கிறது. பாடல் வெளியீட்டுக்கு மட்டும் ரூ.12 கோடியை லைக்கா செலவழிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இதன் கடைசிப் பாடல் காட்சிப் படப்பிடிப்பு, கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. அதோடு ஷூட்டிங் முடிந்துவிட்டதாக எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘இரண்டரை வருடங்களாக பல்வேறு பகுதிகளில் நடந்துவந்த ’2.ஓ’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் ரோலர் கோஸ்டர் வேகத்தில் சென்றது’ என்று கூறியுள்ளார்.