நடிகை டிஸ்கோ சாந்தி சகோதரன் அருண் மொழி வர்மனின் 17 வயது மகளை ஐந்து நாட்களாகத் தேடி வருகின்றனர்.
அருண் மொழி வர்மன் சினிமா உதவி இயக்குனராக உள்ளார். அவரது மூத்த மகள் அப்ரீனா. அவருக்கு 17 வயது. பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார், கடந்த 6ஆம் தேதி முதல் அவரைக் காணாவில்லை. 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். ஆனாலும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. "சர்ச் பார்க் பள்ளியில் இதை பற்றி நாங்கள் விசாரித்த போது பள்ளியில் மொத்தம் 56 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது. ஆனால் சம்மந்தப்பட்ட இடத்தில் உள்ள கேமராக்கள் வேலை செய்யாததால் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை. காவல்துறைக்குத் தேவையான போதிய ஆதாரங்கள் பள்ளித் தரப்பிலிருந்து தரப்படவில்லை. எங்களுக்குப் பள்ளி நிர்வாகம் மெத்தனம் காட்டுவது போல் தோன்றுகிறது” என பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அருண்மொழி வர்மனின் மற்றொரு சகோதரி நடிகை லலிதா குமாரி கூறியிருக்கிறார்.