சினிமா

நவராத்திரி பூஜைக்காக வைக்கப்பட்ட சோனு சூட் சிலை: 10 லட்சம் பேர் செல்ஃபி!

நவராத்திரி பூஜைக்காக வைக்கப்பட்ட சோனு சூட் சிலை: 10 லட்சம் பேர் செல்ஃபி!

sharpana

கொல்கத்தா நவராத்திரி பூஜையில் வைக்கப்பட்ட நடிகர் சோனு சூட் சிலையுடன் இதுவரை 10 லட்சம் பேர் செல்ஃபி தங்களது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் தடப்பட்டன. தங்கள் ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த செலவில் ஊருக்கு அனுப்பி வைக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டார், நடிகர் சோனுசூட்.

அதனையோட்டி உதவிக்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாக, அவரது ட்விட்டர் பக்கத்தில் வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆந்திராவில் ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக்கொடுத்தது, பெற்றோரை இழந்த மூன்று குழந்தைகளை தத்தெடுத்தது, ரஷ்யாவில் தவித்து வந்த மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் இந்தியா அழைத்து வந்தது என்று அவரது சேவைகளின் பட்டியல் நீண்டுகொண்டேச் செல்கிறது.

இதனால், இந்தியா முழுக்க சோனு சூட்டுக்கு மக்கள் தங்கள் அன்பை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில், ஒன்றுதான் கொல்கத்தாவில் நவராத்திரி பூஜையில் நடிகர் சோனு சூட்டை பாராட்டும் வகையில் அவரது உருவம் கொண்ட சிலையும் வைக்கப்பட்ட நிகழ்வு. ’தன் வாழ்வில் தனக்கு கிடைத்த மிகச்சிறந்த விருது இதுதான்’ என்று கடந்தவாரம் நெகிழ்ச்சியோடு பதிவிட்டார்.

இந்நிலையில், இந்த சிலையின் அருகே இதுவரை 10 லட்சம் மக்கள் செல்ஃபி எடுத்துள்ளனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிருந்துள்ள சோனுசூட், ‘நானும் செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா?’ என்று நகைச்சுவையுடன் கேட்டிருக்கிறார்.