‘மதயானைக் கூட்டம்’ கதிர் நடித்துள்ள ‘சிகை’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி சமூக வளைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
மதயானைக் கூட்டம் படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கதிர். அடுத்து, ‘கிருமி’, ‘என்னோடு விளையாடு’ படங்களுக்கு பிறகு கதிர், ‘விக்ரம் வேதா’ படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் பெண் வேடமிட்டு நடித்துள்ள சிகை படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள அப்படத்தின் ட்ரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தை படத்தை தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் டப் செய்து வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், படத்தின் தமிழ் பதிப்பு ட்ரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயனும், தெலுங்கு பதிப்பை நடிகை சமந்தாவும், மலையாள பதிப்பை நடிகர் நிவின் பாலியும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
நவீன் நஞ்சுண்டன் இயக்கும் ‘சத்ரு’, மாரி செல்வராஜ் இயக்கும் ‘பரியேறும் பெருமாள்’ என அடுத்தடுத்து கதிர் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் ரெமோ படத்திற்கு முன்பே வெளியாகி இருந்தது. அடுத்து ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் பெண்வேடமிட்டு நடித்ததால் சிகை பட போஸ்ட்ரை காப்பி அடித்ததாக பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் சிகை பட ட்ரெய்லரை சிவகார்த்திகேயனே வெளியிட்டுள்ளார்.