விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் இரண்டாவது பாடலான ’நீதானே...’ முழுப்பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜயின் 61வது படம் மெர்சல். அட்லி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான ஆளப்போறான் தமிழன் பாடல் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் இன்று காலை வெளியானது. இதனையடுத்து தற்போது நீதானே முழுப்பாடலையும் சோனி மியூசிக் நிறுவனம் ஹங்கமா, கானா இணையதளங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த மெலோடிப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். ’உதயா’, ’அழகிய தமிழ்மகன்’ படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஜய்யின் மெர்சல் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப்பிரம்மண்டமாக நடைபெற உள்ளது.