சினிமா

டிரெண்ட் அடிக்கும் ‘காலா’: யூ டியூப்பில் முதலிடம்

டிரெண்ட் அடிக்கும் ‘காலா’: யூ டியூப்பில் முதலிடம்

webteam

ரஞ்சித் இயக்கத்தில் ர‌ஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ படத்தின் டீசர் யூ டியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் , தனது ட்விட்டர் பக்கத்தில் இரவு 12 மணிக்கு டீசரை வெளியிட்டார். ‘கபாலி’ திரைப்படத்துக்குப் பிறகு இயக்குநர் பா.ரஞ்சித்- ரஜினியின் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘காலா’ படத்தில், ரஜினிகாந்த் நெல்லைத் தமிழில் பேசி நடித்திருக்கிறார். ‘காலா’ படத்தின் டீசர், வெளியிடப்பட்டது முதலே லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். இதனால் யூ டியூப் தளத்தில் ‘காலா’ பட டீசர் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி வெளியாக இருக்கிறது.