மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதிராவ், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள காற்று வெளியிடை படத்தின் ‘வான் வருவான்’ என்ற பாடல் காதலர் தினத்தையொட்டி வரும் 14 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அடுத்து ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் படம் காற்று வெளியிடை. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான இப்படத்தின் ‘அழகியே..’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதைதொடர்ந்து, பிப்பரவரி 14ல் ’வான் வருவான்..’ எனும் காதல் பாடல் வெளியாகவுள்ளது. அதற்கான ஒரு போஸ்டரும் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள காற்று வெளியிடை படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 7 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.