கமலுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் களத்தில் குதித்துள்ளார்.
இந்து தீவிரவாதம் இல்லை என்று சொல்ல முடியாது என கமல்ஹாசன் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிராக கமல் மீது உத்திரபிரதேச மாநிலத்தில் இன்று வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக ''மதத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால் மக்களை பயமுறுத்தும் உங்கள் செயலுக்கு பெயர் தீவிரவாதம் இல்லை என்றால் எதற்கு பெயர் தீவிரவாதம். மனிதர்களை மத ரீதியாக தாக்குவது, பசு பாதுகாப்பிற்காக மனிதர்களை கொல்வது, கலாச்சாரம் என்று கூறி பெண்களை தாக்குவது எல்லாம் தீவிரவாதம் இல்லை என்றால் எது தீவிரவாதம்'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை சம்பவத்தில் இருந்தே பிரகாஷ் ராஜ் பாஜகவை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.