நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்பதை தெரிவித்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
விஜய் சேதுபதி – நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரெளடி தான்’ படத்தில் நடிக்கும்போதிலிருந்து இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வருகிறார் நடிகை நயன்தாரா. அதிலிருந்து, இந்த காதல் ஜோடிகளின் திருமணம் எப்போது? என்பதுதான் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பலரின் எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரசிகர்களுடன் கேள்வி, பதில் மூலம் உரையாடிய விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்பதை தெரிவித்திருக்கிறார். ‘ ஏன் இன்னும் நயன்தாராவை திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள்?” என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு “திருமணத்திற்கு ரொம்ப செலவு ஆகும் ப்ரோ. முதலில் பணம் சேர்த்துவிட்டுத்தான் திருமணம் செய்வோம். கொரோனா போகட்டும் என்று காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் ”நயன்தாரா சமைப்பதில், கீ ரைஸ், சிக்கன் குழும்பு மிகவும் பிடிக்கும். எனது வாழ்கையிலேயே சந்தித்த சிறந்த நபர் என்றால் அது நயன்தாராவின் அம்மாதான்” என்றும் ”வரும் ஜூலை மாதம் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகும் என்றும் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.