சினிமா

'பின்புலம் இல்லாமல் நடிக்க வருபவர்களின் நரம்புகள் எஃகு போல இருக்க வேண்டும்'-சோனு சூட்

'பின்புலம் இல்லாமல் நடிக்க வருபவர்களின் நரம்புகள் எஃகு போல இருக்க வேண்டும்'-சோனு சூட்

EllusamyKarthik

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலைக்கு பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல்தான் காரணம் என குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில் நடிகர்களின் வாரிசுளுக்கு மட்டுமே பாலிவுட்டில் அதிக முன்னுரிமை கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார் நடிகர் சோனு சூட்.

பாலிவுட் சினிமாவில் பெரும்பாலான நடிகர்களும், நடிகைகளும் ‘வாரிசு’ என்ற ஒற்றை சொல்லை மட்டுமே வைத்துக் கொண்டு வருபவர்கள்தான் என சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு  வாரிசுகளுக்கு அங்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படும். ஒரு சிலர் மட்டுமே அதற்கு விதிவிலக்கு. அந்த ஒரு காரணத்தினால் சினிமா பின்புலம் ஏதும் இல்லாமல் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவர்கள் பாலிவுட் சினிமாவுக்குள் நுழைந்தாலும் நீண்ட காலம் நடிக்க முடியாது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில் சினிமா பின்புலம் இல்லாமல் நடிக்க வருபவர்களுக்கு நடிகர் சோனு சூட் அட்வைஸ் கொடுத்துள்ளார் “உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒரே விஷயம் தான். அது என்னவென்றால், உங்கள் நரம்புகளுக்கு எஃகு போல வலு இருந்தால் மட்டுமே இங்கு வரலாம். 

மற்றபடி அதிசயமோ, அற்புதமோ நடக்கும் என்று எதிர்பார்த்து வர வேண்டாம். நல்ல அழகும், உடல் வாகும் இருந்தால் உங்களை வைத்து தயாரிப்பாளர்கள் படம் தயாரிப்பார்கள் என எண்ண வேண்டாம். அதுவே ஒரு நடிகரின் பிள்ளை நடிக்க வேண்டுமென விரும்பினால் உடனடியாக அந்த அப்பா நடிகர் போன் மூலமாக தன்  பட வாய்ப்பை வாங்கிக் கொடுக்க முடியும். ஏனென்றால் இங்கு நட்சத்திரங்களின் வாரிசுகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்” என நடிக்க விரும்புபவர்களுக்கு அறிவுரை கொடுத்துள்ளார். ‘சுஷாந்த் ஒரு கடின உழைப்பாளி’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.