கே.வி.ஆனந்த் இயக்கும் ‘சூர்யா37’ படத்தின் லண்டன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவை எட்டியுள்ளது.
மூன்றாவது முறையாக சூர்யாவும் இயக்குநர் கே.வி.ஆனந்தும் இணையும் திரைப்படம் ‘சூர்யா37’. இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இந்தப் படத்தின் பூஜை ஜூன் 25ம் தேதி லண்டனில் போடப்பட்டது. அதில் சூர்யா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர். மேலும் முதற்கட்ட படப்பிடிப்பும் லண்டனில் தொடங்கியது. இப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பாலிவுட் நடிகர் போமன் இரானி தெலுங்கு நாயகன் அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் தற்சயம் லண்டனில் நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து படக்குழு தங்கள் அடுத்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆயத்தமாகி வருவதாக தெரிகிறது. ‘லைகா’ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. ஏற்கெனவே செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘என்ஜிகே’ இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என அப்படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இதனை அடுத்து இதே வருடத்தின் இறுதியில் ‘சூர்யா37’ படக்குழு தனது முழு படப்பிடிப்பையும் முடிக்க உள்ளது. அடுத்த வருடம் கோடை கொண்டாட்டமாக இப்படம் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.