நடிகர் கிருஷ்ணா, இயக்குநர் விஷ்ணுவர்தன் ஆகியோர் தந்தையும் படத் தயாரிப்பாளருமான ‘பட்டியல்’ சேகர் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 63.
பரத், ஆர்யா, பூஜா நடிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கிய 'பட்டியல்', கிருஷ்ணா நடித்த 'அலிபாபா' ,'கழுகு' உட்பட சில படங்களைத் தயாரித்தவர் சேகர். பட்டியல் படத்துக்கு பிறகு ’பட்டியல்’ சேகர் என்று அழைக்கப்பட்டார். 'ராஜதந்திரம்' படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள மின் மயானத்தில் இறுதி சடங்கு நடக்கிறது.