மணிரத்னத்தின் ‘சிசிவி’ படப்பிடிப்பில் இருந்து அருண் விஜய் விடைபெற்றுள்ளார்.
வெளிவர இருக்கும் மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார் அருண் விஜய். இந்த வாய்ப்பு முதன்முறையாக அவருக்கு கிடைத்திருப்பதால் அவர் அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியில் இருக்கிறார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகவேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் படத்தை இயக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக துபாய் செல்ல இருக்கிறார்.
இந்நிலையில், இதில் அருண் விஜய்யின் காட்சிகள் முழுமையாக படப்பிடிப்பு செய்யப்பட்டுவிட்டது. அவரது பகுதியை முடித்துக் கொடுத்துள்ள அருண் விஜய், அது சம்பந்தமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில்,“என் வேலைகள் முடிந்துவிட்டது. ‘சிசிவி’யில் இருந்து விடைப்பெற்றேன். பல நட்சத்திரங்கள் உடன் இணைந்து பணியாற்றியதும் மணிரத்னம் சாருடன் வேலை செய்ததும் அற்புதமான அனுபவம். நான் இந்தப் படக்குழுவை மிஸ் பண்ணுகிறேன். மீண்டும் இணைவோம் ” என்று தெரிவித்துள்ளார்.