வணிகம்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சரிவை சந்தித்து வரும் ஜியோமி நிறுவனம்

EllusamyKarthik

சர்வதேச அளவில் அறியப்படும் ஸ்மார்ட்போன் பிராண்டான ஜியோமி நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தது. தொடர்ச்சியாக விற்பனையில் கொடிகட்டி பறந்து வந்த அந்நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனது 8 சதவீத சந்தை வாய்ப்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2020-இன் முதல் காலாண்டில் 29 சதவீதமாக இருந்த ஜியோமியின் சந்தை வாய்ப்பு 2021-இன் கடைசி காலாண்டில் 21 சதவீதமாக குறைந்துள்ளது. இதனை சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சர்வதேச தொழில்நுட்ப மார்க்கெட் அனலிஸ்ட் நிறுவனமான Canalys தெரிவித்துள்ளது. 

போட்டி நிறுவனங்களுக்கு இந்திய சந்தையில் கிடைத்துள் அமோக வரவேற்பு மற்றும் சர்வதேச அளவில் நிலவிய சிப்செட் தட்டுப்பாடு இதற்கு பிரதான காரணமாக சொல்லப்பட்டுள்ளது.