வணிகம்

வரலாற்று சாதனை படைத்தார் குத்துச்சண்டை வீரர் மேரி கோம்

rajakannan

உலக மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் 6வது முறையாக தங்கப் பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மேரி கோம் வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

48 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் 5:0 என்ற கணக்கில் உக்ரைனின் ஹன்னா ஒகோடாவை மேரி கோம் வீழ்த்தினார். டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 35 வயதான மேரி கோம் 8 வருடங்களுக்கு பின் மீண்டும் பதக்கத்தை கையில் ஏந்தியுள்ளார். உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டையில் கடைசியாக மேரி கோம் பதக்கம் வென்றது 2010-ஆம் ஆண்டில்தான். 

கடந்த 2001-ஆம் ஆண்டில் இருந்து உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டியில் ஆடிவரும் மேரி கோம், இதுவரை 5 தங்கம், ஒரு வெள்ளி என 6 பதக்கங்களை வென்றிருந்தார். இந்த நிலையில் 6வது தங்கம் உட்பட தற்போது 7-வது பதக்கத்தை வென்றுள்ளார். 

உலக மகளிர் குத்துச் சண்டையில் தங்கப் பதக்கம் வென்றதை அடுத்து தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு மேரி கோம் நன்றி தெரிவித்துள்ளார். “கடந்த சில ஆண்டுகளாக போட்டிகளில் சரியாக திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. என்னுடைய எடைப்பிரிவு மாறியது சவாலாக இருந்தது. இன்று நான் மகிழ்ச்சியாக உள்ளேன்” என்றார் மேரி கோம்.