வணிகம்

3 மாதங்களில் 12,000 வேலைவாய்ப்புகளை வழங்கிய விப்ரோ

3 மாதங்களில் 12,000 வேலைவாய்ப்புகளை வழங்கிய விப்ரோ

நிவேதா ஜெகராஜா

விப்ரோ நிறுவனம் கடந்த காலாண்டில் 12,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் ஒரு காலாண்டில் வழங்கப்பட்ட அதிக வேலை வாய்ப்பு இதுதான் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அதேநேரம் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறுவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது. கடந்த மார்ச் காலாண்டில் 12 சதவீதமாக இருந்த வெளியேறுவோர் விகிதம், ஜூன் காலாண்டில் 15.5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

ஜூன் மாத முடிவில் 2 லட்சம் பணியாளர்கள் என்னும் நிலையை தாண்டி 2.09 லட்சம் பணியாளர்கள் விப்ரோவில் உள்ளனர். இந்தியாவில் உள்ள பணியாளர்களில் 55 சதவீதம் தடுப்பூசி எடுத்துக்கொண்டிருப்பதாக விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி தெரிவித்திருக்கிறார்.

விப்ரோவின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 35 சதவீதம் உயர்ந்து 3,230 கோடி ரூபாயாக இருக்கிறது. அதேபோல வருமானம் 22.4 சதவீதம் உயர்ந்து ரூ.18,250 கோடியாக இருக்கிறது. தற்போதைய வருமானத்தை விட அடுத்த காலாண்டில் 5 முதல் 7 சதவீதம் வரை வளர்ச்சி இருக்கும் என நிறுவனம் கணித்திருக்கிறது.