வணிகம்

விற்பனை கடும் சரிவால் நானோ கார் உற்பத்தியை நிறுத்த பரிசீலனை

webteam

டாடா மோட்டார்‌‌ஸ் நிறுவனம் நானோ கார் உற்பத்தியை நிறுத்திக்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நானோ கார்கள் விற்பனை திருப்தி தரும் வகையில் இல்லாததால் இம்முடிவுக்கு டாடா மோட்டார்ஸ் வந்துள்ளதாக தெரிகிறது. கடந்த மே மாதம் மொத்தம் 355 நானோ கார்கள் மட்டுமே விற்பனையானதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் வெளிநாட்டு சந்தைகளுக்கு மட்டும் நானோ கார்களை தொடர்ந்து ஏற்றுமதி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.