வணிகம்

கோயம்பேடு சந்தையில் இடமளித்தும் தக்காளி விலை ஏன் குறையவில்லை? - உயர்நீதிமன்றம்

கோயம்பேடு சந்தையில் இடமளித்தும் தக்காளி விலை ஏன் குறையவில்லை? - உயர்நீதிமன்றம்

Veeramani

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகளை நிறுத்த இடமளித்தும் பெருமளவில் விலை குறையவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளியை சென்னை கோயம்பேடு சந்தையில் இறக்குவதற்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கவில்லை என்றும் அரை ஏக்கர் நிலம் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

94 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தக்காளி இறக்கும் இடத்தில் விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் மார்க்கெட் கமிட்டி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இரு அறிக்கைகளையும் ஆய்வு செய்த நீதிபதி, தக்காளியை இறக்கி ஏற்றுவதற்கான இடம் ஒதுக்கப்பட்ட நிலையிலும், தக்காளியின் விலை ஏன் பெருமளவு குறையவில்லை என கேள்வி எழுப்பினார்.

தென்மாநிலங்களில் கனமழை காரணமாக விளைச்சல் இல்லை என்றும் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். தக்காளி இறக் ஒதுக்கப்பட்ட இடத்தை பொங்கல் வரை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி, தக்காளி ஏற்றி, இறக்கும் இடத்தில் சில்லறை மற்றும் மொத்த விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிட்டார்.