வணிகம்

“இப்படி நடந்தால் இந்தியாவில் யார் முதலீடு செய்வார்கள்?”-NSE மோசடி குறித்து நீதிபதி காட்டம்

EllusamyKarthik

தேசியப் பங்குச் சந்தையில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான வழக்கு இன்று சிபிஐ நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி “இதுபோன்ற மோசடிகள் நடந்தால் இந்தியாவில் யார் முதலீடு செய்வார்கள்?” என கேட்டுள்ளார். 

தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனராக பதவி வகித்தபோது சித்ரா ராமகிருஷ்ணா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டியது. தனிப்பட்ட முறையில் அவர் சில நபர்களை பணி நியமனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், தேசிய பங்குச்சந்தை விவரங்களை முன்கூட்டியே ஏஜெண்டுகளுக்கு கசிய விட்டதாகவும், தகவல் பகிர்வு செய்ததாகவும் புகார் எழுந்தது. அதனால் குற்றச்சாட்டுக்கு ஆளான சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 

“இந்த மோசடி விவகாரத்தால் நமது நம்பகத்தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இப்படியே இது குறித்து நீங்கள் நான்கு ஆண்டுகள் விசாரணை நடத்திக் கொண்டே இருக்கக் கூடாது. விசாரணையை விரைந்து முடித்திட வேண்டும். இப்படி நடந்தால் இந்தியாவில் யார் முதலீடு செய்வார்கள்?” என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.