வணிகம்

இந்திய பொருளாதாரம் எப்படி? சர்வதேச நிதிய தலைவர் கணிப்பு

இந்திய பொருளாதாரம் எப்படி? சர்வதேச நிதிய தலைவர் கணிப்பு

webteam

இந்திய பொருளாதாரம் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் ஸ்திரத்தன்மையுடன் சரியான பாதையில் சென்றுக் கொண்டிருப்பதாக சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டினே லகார்டே தெரிவித்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம், பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக இந்தியா பொருளாதாரத்தின் வளர்ச்சி பாதிப்படைந்திருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நடுத்தர மற்றும் நீண்டகால வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்திய பொருளாதாரம் சென்றுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிறிய தேக்கம் குறுகிய கால பாதிப்பே தவிர, இது நீண்ட கால அடிப்படையில் பயன்தரும் என்றும் கிறிஸ்டினே தெரிவித்துள்ளார். அண்மையில், இந்தியாவின் வளர்ச்சிக்கான விகிதத்தை சர்வதேச நிதியம் குறைத்தது குறிப்பிடத்தக்கது.