இந்தியாவில் வாகன விற்பனை வீழ்ச்சி ஆகஸ்ட் மாதத்திலும் தொடர்கதையாகியுள்ளது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இது தெரியவந்துள்ளது.
நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி ஆகஸ்டில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 413 கார்களை விற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஆகஸ்ட் விற்பனையை விட 32.7% குறைவு என மாருதி கூறியுள்ளது.
ஹோண்டா நிறுவனம் தனது கார்கள் விற்பனையை ஆகஸ்டில் 17 ஆயிரத்து 20 ஆக குறைந்துள்ளதாகவும் இது முந்தைய ஆண்டு ஆகஸ்ட் விற்பனையை விட 51% குறைவு என்றும் தெரிவித்துள்ளது. ஆகஸ்டில் டொயோட்டோ கிர்லோஸ்கரின் விற்பனை 21% குறைந்து 11 ஆயிரத்து 544 ஆகியுள்ளது. இதே போல மகிந்திரா நிறுவனம், 25 சதவிகிதம் விற்பனை குறைந்துள்ளதாக கூறியுள்ளது.