வணிகம்

காதலர் தினம்: கோயம்பேடு மலர் சந்தையில் ரோஜா விற்பனை அமோகம்

Veeramani

காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் விதவிதமான ரோஜாக்கள் விற்பனைக்கு வந்துள்ளன

உலக அளவில் காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் ஓசூரில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு அதிக அளவில் ரோஜா பூக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வழக்கமான நாட்களில் சராசரியாக 5 முதல் 7 டன் வரையிலான ரோஜாக்கள் கொண்டுவரப்படும் நிலையில் தற்போது 10 டன் ரோஜா மலர்கள் கோயம்பேடு சந்தையில் இறக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரத்தை ஒப்பிடும்போது பூக்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது 20 மலர்கள் கொண்ட ஒரு கட்டு தாஜ்மகால் ரக ரோஜா பூக்கள் 350 முதல் 400 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. நோபிள்ஸ் பிங்க் ரக ரோஜா 380 முதல் 400 ரூபாய் வரையிலும், ராக்ஸ்டார் ஆரஞ்சு ரோஜா 350 முதல் 400 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஆஸ்பரஸ் இலை மற்றும் ரோஜாக்களோடு அலங்கரிக்கப்பட்ட பூங்கொத்துகள் 600 முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையாகிறது.