யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் பராமரிக்கப்படும் சில குறிப்பிட்ட கணக்குகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் வரை ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் பராமரிக்கப்படும் சில குறிப்பிட்ட கணக்குகளில் இருந்து பெருமளவில் பணம் எடுக்கப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கிக்கு புகார் ஒன்று சென்றது. இந்த புகாருக்கான ஆவணங்களை ஆய்வு செய்ததில், ஒழுங்குமுறை விதிகளை வங்கி கடைப்பிடிக்கவில்லை என தெரியவந்தது. தனது வாடிக்கையாளர்களிடம் பணபரிமாற்றம் அல்லது ஒப்பந்தம் பற்றிய எந்த முன்னறிவிப்பையும் தெரிவிக்க வங்கி முன்வரவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்தது. கே.ஒய்.சி. எனும் உங்களது வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் என்ற விதிமுறைகளின்படி ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுகளை அந்த வங்கி பின்பற்றாத நிலையில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவிற்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.