வணிகம்

டெலிகாம் நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் டிராய்

டெலிகாம் நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் டிராய்

webteam

தொலைதொடர்பு நிறுவனங்கள் அளிக்கும் சேவைக் கட்டணங்களை முறைப்படுத்த புதிய விதிமுறைகளை வகுக்க இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) முடிவு செய்துள்ளது.
 
இந்திய தொலைதொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப்  பின்னர், சலுகை விலையில் பல்வேறு சேவைகள் குறித்த அறிவிப்பினை தொலைதொடர்பு நிறுவனங்கள் பரஸ்பரம் அறிவித்து வருகின்றன. தொலைதொடர்பு துறை சேவைகள் பிரிவில் வழங்கப்படும் சேவைகளுக்கான விலை நிர்ணய வரைமுறைகளை இந்த நடைமுறைகள் சீர்குலைக்கும் என்று ஜியோ மீது மற்ற நிறுவனங்களும், மற்ற நிறுவனங்கள் மீது ஜியோவும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன. இந்தநிலையில், தொலைதொடர்பு துறையில் விலை நிர்ணய முறையை ஒழுங்குபடுத்தும் புதிய விதிமுறைகள் 6 வாரத்தில் வெளியிடப்படும் என்று டிராய் அமைப்பில் செயலாளர் சுதீர் குப்தா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக கடந்த 1999ம் ஆண்டில் வெளியிடப்பட்ட விதிமுறைகளில் மாற்றம் செய்து அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.