மத்திய பட்ஜெட் 2019ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில முக்கியமான அறிவிப்புகளை பார்ப்போம்.
ஒரே நாடு ஒரே மின்சார தொகுப்பு திட்டம்.
ரயில்வே துரையில் தனியார் பங்களிப்பு அதிகரிக்கவேண்டும்.
2024 ஒவ்வொரு வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க ‘ஹர் கர் ஜல்’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
காந்தியக் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க காந்தி பீடியா திட்டம் உருவாக்கப்படும்.
பான் எண் குறிப்பிட வேண்டிய அனைத்து இடங்களிலும் ஆதார் எண்ணை குறிப்பிடலாம்.
இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படும்.
5 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு முளு வரி சலுகை அளிக்கப்பட்டுள்ளதால் வருமான வரி செலுத்த தேவையில்லை. எனினும் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை.
பார்வையற்றோரும் தெரிந்துகொள்ளும் வகையில் ரூ.1, ரூ.2, ரூ5, ரூ10 புதிய நாணயங்கள் வெளியிடப்படும். அத்துடன் 20 ரூபாய் நாணயம் புதிதாக வெளியிடப்படும்.
பெட்ரோல் டீசல் மீதான கூடுதல் கலால் வரி மற்றும் சாலை உட்கட்டமைப்பிற்கான வரி ஆகிய இரண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு தலா 2 ரூபாய் அதிகரிக்கும்.
தங்கத்தின் மீதான சுங்க வரி 10%லிருந்து 12.5% அதிகரிக்கப்பட்டுள்ளது.