வணிகம்

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் அதிகரிக்கிறதா..? நாளை கவுன்சில் கூட்டம்

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் அதிகரிக்கிறதா..? நாளை கவுன்சில் கூட்டம்

Rasus

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது. பல பொருட்களுக்கு ஜிஎஸ்டியை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி பிரிவுகளில் மாற்றம் கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிஎஸ்டி வசூல் கணிசமாக குறைந்த நிலையில், வசூலை அதிகரிக்க ‌நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.

தற்போது ஜிஎஸ்டி விகிதங்கள் 5, 12,18 மற்றும் 28 சதவிகிதங்களில் உள்ள நிலையில், அவற்றை 8, 18, 28 என்ற சதவிகிதங்களில் மாற்ற அரசு
திட்டமிட்டு வருவதாக‌க் கூறப்படுகிறது. குறிப்பாக, ஏழை, நடுத்தர மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தாத ஸ்மார்ட் போன்கள், விமான பயண டிக்கெட், ஏசி வசதியுடன் கூடிய ரயில் பயண டிக்கெட், பீட்சா, மருத்துவமனைகளில் உயர்தர அறைகள், ஓவியங்கள், பிராண்டட் ஆடைகள், பட்டு ஆடைகள் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி விகிதங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்‌ளன.