வணிகம்

கோவாவில் நாளை ஜிஎஸ்டி கவுன்சிலின் 37-வது கூட்டம்

Rasus

ஜிஎஸ்டி கவுன்சிலின் 37-வது கூட்டம் கோவாவில் நாளை நடைபெற உள்ளது.

பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ள சவாலான சூழலில் இக்கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது. வாகனங்கள், பிஸ்கட் உற்பத்தியாளர்கள், உணவகங்கள் என பல்வேறு துறையினரும் தங்கள் துறையை சிக்கலில் இருந்து மீட்க வரிக் குறைப்பை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு நெருக்கடி தந்து வருகின்றனர்.

அதே சமயம் ஜிஎஸ்டி வரி வருவாய் ஏற்கெனவே ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு கீழ் சென்றுவிட்ட நிலையில் புதிய வரிக்குறைப்புகளை அறிவித்தால் அரசின் வருவாய் மேலும் குறையும். இதன் காரணமாக வரிக்குறைப்பு குறித்த கோரிக்கைகளை ஜிஎஸ்டி கவுன்சிலில் உள்ள நிதித்துறை அதிகாரிகள் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர ஜிஎஸ்டி வரி நடைமுறையில் உள்ள பல்வேறு சிக்கல்களை களையும் வகையிலான அறிவிப்புகளும் இக்கூட்டத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது