வணிகம்

நாளை தொடங்குகிறது அமேசானின் பண்டிகை கால விற்பனை...

நாளை தொடங்குகிறது அமேசானின் பண்டிகை கால விற்பனை...

webteam

மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அமேசானின்  பண்டிகை கால விற்பனை நாளை முதல் ஆரம்பமாகிறது.   

அமேசானின் நான்கு நாள் சிறப்பு சலுகை விற்பனை கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் மீண்டும் நாளை முதல் வரும் 8-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு அடுத்த சிறப்பு சலுகை விற்பனை தொடங்கவுள்ளது. ஆன்லைன் விற்பனையில் வாடிக்கையாளர்களிடம்  தனக்கென தனி இடத்தை பெற்றிருக்கும் அமேசான் தொடர்ந்து பல பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனைகளை வழங்கி வருகின்றது. அதன் அடிப்படையில் இந்த மாதத்தில்  தீபாவளி பண்டிகை வருவதையொட்டி மீண்டும் சிறப்பு சலுகை விற்பனையினை அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு சலுகையில் சிட்டிபேங்க் கிரிடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகிதம் வரை சலுகை வழங்கப்படுவதாக அமேசான் அறிவித்துள்ளது. மேலும் சோனி, சாம்சங், எல்ஜி, ஹெச்பி, ஆப்பிள் மற்றும் நோக்கியா போன்ற பிராண்டுகள் குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களுடன் இந்த விற்பனையில் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.