வணிகம்

ஜன.22: சென்னையில் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்த தங்கம் விலை

ஜன.22: சென்னையில் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்த தங்கம் விலை

webteam

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 37,400 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதிலிருந்து 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கமானது 37,280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கமானது நேற்று 4,675 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,660 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 காரட் தங்க விலை நிலவரத்தை பொறுத்தவரையில், சவரனுக்கு நேற்று 40,472 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 40,352 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கமானது நேற்று 5,059 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 5,044 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை 71,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் வெள்ளியானது 71.40 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.