ஜிஎஸ்டி வரி விதிப்பால் 250 முதல் 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக டாடா குழும நிறுவனமான டைட்டன் தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஜிஎஸ்டி வரி காரணமாக கடந்த ஜூலை மாத விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பை பங்குசந்தைக்கு அளித்த அறிக்கை ஒன்றில் டைட்டன் நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், பணப்பதுக்கல் தடுப்புச் சட்டம் நகைத் தொழில் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மத்திய அரசு அறிவித்ததும் தங்கள் நிறுவனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணப்பதுக்கல் தடுப்பு சட்டத்தில் உள்ள விதிகளில் தளர்வு வேண்டும் எனவும் டைட்டன் நிறுவனம் கோரியுள்ளது.