வணிகம்

அமெரிக்க வங்கிகள் திவாலால் குவியும் முதலீடுகள்.. வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை!

webteam

கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது, இதற்கு இரண்டு அமெரிக்க வங்கி திவாலானதை ஒரு முக்கிய காரணமாகச் சொன்னாலும், அமெரிக்காவில் மேலும் சில வங்கிகள் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து, முதலீட்டாளர்கள் அதிகளவு தங்கத்தின் மீது முதலீடு செய்வதும் ஒரு முக்கிய காரணம். அந்த வகையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலையானது அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அந்த வகையில், சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூபாய் 160 அதிகரித்து ரூபாய் 44,640 க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் விலை உயர்ந்து 5580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து நகைகள் வர்த்தக சங்கச்செயலாளார், சாந்தகுமாரிடம் இது குறித்து கேட்டப்பொழுது,

”அமெரிக்காவில் செயல்பட்டு வந்த வங்கிகள் திவாலானது முக்கிய காரணம், அதனால் அங்கு வங்கியில் இருக்கும் பணத்தில் தங்கத்தின் மீது முதலீடு செய்வதால், தொடர்ந்து தங்கத்தின் விலையானது ஏறி வருகிறது. இந்த மாத இறுதிக்குள்ளாக தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5000 லிருந்து 6000 வரை உயரலாம். ஆகவே, தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் தாராளாமாக தங்கம் வாங்கி வைக்கலாம். “ என்றார்.