வணிகம்

கிராமிற்கு 16 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை - வெள்ளியின் விலை குறைந்தது

Veeramani

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சிறிய இறக்கம் கண்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 16 ரூபாய் விலை குறைந்து 4 ஆயிரத்து 434 ரூபாய்க்கும், ஒரு சவரன் 128 ரூபாய் விலை இறங்கி 35 ஆயிரத்து 472 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் விலை குறைந்து 68 ரூபாய் 30 காசுக்கு விற்பனையாகிறது.