இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசசின், நிகர லாபம் குறைந்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் 5 ஆயிரத்து 945 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் டிசிஎஸ் நிறுவன லாபம் ஆறாயிரத்து 317 கோடியாக இருந்தது. இது 5 புள்ளி 9 சதவிகித சரிவாகும். ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் பத்து சதவிகிதம் குறைந்துள்ளது.