மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என நகைத் துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நகைத் தொழிலில் நாடு முழுவதும் பல லட்சம் பேர் ஈடுபட்டுள்ள நிலையில், பண மதிப்பு நீக்கத்தால் கடந்த பல மாதங்களாக நகை வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஆபரணக் கற்கள் மற்றும் நகை நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தங்கம் இறக்குமதி குறைந்துள்ள நிலையில், இறக்குமதி வரியை 10 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக பட்ஜெட்டில் குறைக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, பண மதிப்பு நீக்கத்தால் இந்தியாவில் தங்கம் இறக்குமதி சரிந்திருப்பது தற்காலிகமானது என்று கூறியுள்ள உலக தங்க கவுன்சில், விரைவில் நிலைமை சீராகி விடும் என்று நம்பிக்கக தெரிவித்துள்ளது.