வணிகம்

முதல் நாள் வர்த்தகத்தில் 113% உயர்ந்த 'தத்வா சிந்தன் பார்மா' பங்குகள்!

முதல் நாள் வர்த்தகத்தில் 113% உயர்ந்த 'தத்வா சிந்தன் பார்மா' பங்குகள்!

EllusamyKarthik

தத்வா சிந்தன் பார்மா (Tatva Chintan Pharma) பங்குகள் இன்று பங்குச்சந்தையில் பட்டியலானது. முதல் நாள் வர்த்கத்தில் 113 சதவீதம் அளவுக்கு உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்தது. பட்டியலாகும் நாள் அன்று 100 சதவீத ஏற்றம் அடைந்த மூன்றாவது பங்கு, தத்வா.

ஜிஆர் இன்பிரா புராஜக்ட்ஸ் 108 சதவீதமும், இண்டிகோ பெயிண்ட்ஸ் 109 சதவீதமும் உயர்ந்தது. ஆனால், த்தவா 113 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

கடந்த வாரம் புதிய பங்குகளுக்கான விண்ணப்பம் இருந்தது. 500 கோடி திரட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் 180 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கு 1,083 ரூபாய் என்னும் அளவில் ஒதுக்கப்பட்டது. இந்த பங்குகளின் வர்த்தகம் வியாழன் அன்று தொடங்கியது.

வர்த்தகத்தின் இடையே அதிகபட்சம் ரூ.2,534 வரை உயர்ந்தது. ஆனால் வர்த்தகத்தின் முடிவில் ரூ.113 சதவீதம் உயர்ந்து 2,312 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.

கடந்த வாரம் வெளியான ஜொமோட்டோ பங்குகளும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. முதலீட்டுக்கு ஏற்ற சூழல் நிலவுவதால் பல நிறுவனங்களின் ஐபிஓ கொண்டு தயாராக உள்ளன.