வணிகம்

டாடா மோட்டார்ஸின் 'டிகோர்' எலெக்ட்ரிக் வாகனத்துக்கு தொடங்கிய முன்பதிவு

டாடா மோட்டார்ஸின் 'டிகோர்' எலெக்ட்ரிக் வாகனத்துக்கு தொடங்கிய முன்பதிவு

JustinDurai
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனமான டிகோர் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஷோ-ரூம்கள் மற்றும் இணையத்தில் இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் முறையான விற்பனை தொடங்கும்.
5.7 வினாடிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட முடியும். பாஸ்ட் சார்ஜிங் (50 kW) முறையில் ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்ற முடியும். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வீடுகளில் சார்ஜ் ஏற்றுவதற்கு வசதி செய்து கொடுக்கும். இதன் மூலம் 8.5 மணி நேரத்தில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்ற முடியும். இதன் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் வாரண்டி கொடுக்கப்பட்டிருக்கிறது. 1.60 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்ய முடியும் என தெரிகிறது.
ஒருமுறை சார்ஜ் ஏற்றும் பட்சத்தில் 300 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விலை, கலர் மற்றும் இதர தகவல்கள் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
ஏற்கெனவே டாடா நெக்ஸான் இவி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த மாடல் கார் வெற்றிகரமாக செயல்படுவதை அடுத்து இரண்டாவது மாடல் அறிமுகம் செய்யப்படுகிறது. எலெட்ரிக் வாகனங்களுக்காக கடந்த சில ஆண்டுகளாக இந்தியா தயாராகி வந்தது. தற்போது எலெக்ட்ரிக் சந்தை வளர்ந்து வருகிறது. விரைவில் எலெக்ட்ரிக் வாகனம் என்பது பிரதான சந்தையாக மாறும் என டாடா மோட்டார்ஸ் கூறியுள்ளது.