வணிகம்

டாடா மோட்டார்ஸ் வாகன விலை உயர்வு

நிவேதா ஜெகராஜா

பயணிகளின் வாகன விலையை டாடா மோட்டர்ஸ் உயர்த்த திட்டமிட்டிருக்கிறது. மே 8-ம் தேதி முதல் இந்த விலை உயர்வு இருக்கும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்திருக்கிறது. சம்பந்தபட்ட மாடல்களை பொறுத்து விலை ஏற்றம் இருக்கும், இருந்தாலும் சராசரியாக 1.8 சதவீத அளவுக்கு ஏற்றம் இருக்கும் என தெரிகிறது.

ஸ்டீல் உள்ளிட்ட பல மூலப்பொருட்களின் விலை அதிகரித்திருப்பதால், இந்த விலை ஏற்றத்தை வாடிக்கையாளர்களிடம் கடத்த வேண்டி உள்ளது என டாடா மோட்டர்ஸ் அறிவித்திருக்கிறது.

ஆனால் இதுவரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட விலையிலே வழங்கப்படும். மே மாதம் 7-ம் தேதி வரை முன்பதிவு செய்வதவர்களுக்கு பழையவிலையிலும், மே 8-ம் தேதி முன்பதிவு செய்பவர்களுக்கு புதியவிலையிலும் கார் வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. மாடல் மற்றும் வேரியண்டை பொறுத்து விலை ஏற்றம் இருக்கும் என நிறுவனம் அறிவித்திருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.4.85 லட்சம் முதல் ரூ.21.4 லட்சம் வரையில் கார்களை விற்பனை செய்கின்றது.

ரெனால்ட், எம்.ஜி, வோல்வோ, டொயோடா உள்ளிட்ட கார் உற்பத்தி நிறுவனங்கள் மே மாதத்தில் கார்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. மாருதி நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் சில மாடல் கார்களின் விலையை உயர்த்தியது.

மூலப்பொருட்களின் விலை ஏற்றமே கார்களின் விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.