வணிகம்

தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது; இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு

Sinekadhara

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை வரும் 2 ஆம் தேதி கூடுகிறது. அது தொடர்பாக விவாதிக்க அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

மே மாதத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.