வணிகம்

வருமான வரி தாக்கல் செய்யும் வழிமுறை இதுதான்... தெரிஞ்சுக்கோங்க..!

வருமான வரி தாக்கல் செய்யும் வழிமுறை இதுதான்... தெரிஞ்சுக்கோங்க..!

webteam

வருமான வரி தாக்கல் செய்யவதற்கு இந்த மாதம் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். இன்னும் ஒரு வார காலம் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக வருமான வரி தாக்கல் செய்வது குறித்த தகவல்களை தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில் சட்டதிட்டங்களின் படி வருமானம் பெரும் தனிநபர், வருமான உச்ச வரம்பிற்கு மேல் தங்கள் வருமானம் இருந்தால் வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை வரியாக செலுத்த வேண்டும். வருமான உச்ச வரம்புக்குள் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியது கட்டாயம் இ்ல்லை. ஆனால் வருமானம் குறித்த தகவல்களை தாக்கல் செய்து வைத்திருக்க வேண்டும்.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதில் தற்போது நடைமுறையில் 2 வழிமுறைகள் உள்ளன. வருமான வரி தாக்கல் செய்வோர் வரிப்படிவத்தை நிரப்பி நேரடியாக வருமான வரித்துறை அலுவலகம் சென்று தாக்கல் செய்வது. மற்றொன்று E-FILLING எனப்படும் இணையத்தள வாயிலாக தாக்கல் செய்யும் முறை. தற்போது அதிக அளவிலானோர் பயன்படுத்தக்கூடிய இணையத்தளத்தின் மூலமாக வருமான வரியை மிகவும் எளிமையான முறையில் தாக்கல் செய்யலாம். ஏற்கனவே வருமான வரி இணையத்தள கணக்கு இல்லாதவர்கள்,www.incometaxindiaefilling.gov.in என்ற இணையத்தள முகவரியில் லாக் இன் செய்து புதிய கணக்கு ஒன்றை தொடங்க வேண்டும். புதிய கணக்கில் தங்களுக்கான பொதுவான விவரங்ளை பூர்த்தி செய்த பின்னர் தங்களுக்கான ஐ.டி.ஆர் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

பல்வேறு வழிகளில் வரும் வருமானத்திற்கு ஏற்றவாறு வருமான வரி செலுத்த மொத்தம் 7 ஐ.டி.ஆர் படிவங்கள் உள்ளன, அதில் தங்கள் வருமானத்திற்கு மற்றும் சொத்து விபரங்களுக்கு ஏற்ற படிவத்தை பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் அந்தப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கையெழுத்திட்டு அதில் குறிப்பிட்டுள்ள பெங்களூரு முகவரிக்கு 120 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.

டிஜிட்டல் கையெழுத்தைப் பயன்படுத்தி தாக்கல் செய்பவர்கள், ஆதார், வங்கி கணக்கு போன்றவற்றின் மூலம் கைபேசிக்கு வரும் OTP கொண்டு பதிவேற்றம் செய்பவர்கள், படிவத்தை பெங்களூரு அனுப்ப தேவையில்லை. இந்தாண்டு முதல் முறையாக வருமான வரியை காலதாமதமாக செலுத்துவோருக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.