சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணம் குறித்த தகவல்களை வெளியிடும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் சுவிட்சர்லாந்து அரசும் கையெழுத்திட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் ஏராளமான இந்தியர்கள் கோடிக்கணக்கில் கருப்பு பணம் பதுக்கி உள்ளனர். இது பற்றிய தகவல்களை இந்தியாவுடன் தானாகவே பகிர்ந்துகொள்ள வகை செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியாவும், சுவிட்சர்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி அங்கு பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய தகவல்களை அடுத்த ஆண்டு முதல் இந்தியாவுக்கு வழங்க சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதற்கட்ட தகவல்கள் 2019-ம் ஆண்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய விவரங்களை பரிமாறுவது தொடர்பான அறிவிப்பு அந்நாட்டின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.