வணிகம்

பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம்

பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம்

webteam

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் இன்றும் உயர்வுடன் வணிகத்தைத் தொடங்கின. சென்செக்ஸ் 57 புள்ளிகள் அதிகரித்து 32 ஆயிரத்து 215 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 8 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 101 ஆனது. கடந்த 5 மாதங்களில் இல்லாத உயர்வை பணவீக்க விகிதம் தொட்ட நிலையிலும், ஆசிய சந்தைகளின் உயர்வைப் பின் தொடர்ந்து, பங்குச் சந்தைகள் அதிகரித்துள்ளன.