வணிகம்

தீபாவளி நெருங்கும் நிலையில் கார்கள், மொபைல் போன்களின் விலை அதிகரித்து வருவது ஏன்?

தீபாவளி நெருங்கும் நிலையில் கார்கள், மொபைல் போன்களின் விலை அதிகரித்து வருவது ஏன்?

EllusamyKarthik

தீபாவளி திருநாள் அடுத்த சில நாட்களில் இந்தியாவில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கார்கள் மற்றும் மொபைல் போன்களின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. வழக்கமாக பண்டிகை காலங்களில் அதிரடி ஆஃபர்கள் அள்ளி வழங்கப்படும் நிலையில் இந்த விலை ஏற்றம் ஏன் என்பதை பார்க்கலாம்?

மொபைல் போன்களை பொறுத்தவரையில் உலகளவில் நிலவும் ‘சிப்’ (Chip) தட்டுப்பாடு தான் இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 முதல் 10 சதவிகிதம் வரையில் ஸ்மார்ட் போன்களின் விலையில் மாற்றம் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மறுபக்கம் கார் உற்பத்திக்கு தேவையான மூலக்கூறு பொருட்களின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளதால் கார்களின் விலையும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியும் இந்த விலை ஏற்றம் 2022 பிற்பாதி வரையில் தொடர வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.