வணிகம்

சின்ன வெங்காயம் விலை திடீர் உயர்வு!

சின்ன வெங்காயம் விலை திடீர் உயர்வு!

webteam

சாம்பார் வெங்காயம் எனப்படு சின்ன வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 40 முதல் 50 ரூபாய் அதிகரித்துள்ளது. 
கடந்த வாரங்களில் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது கிலோ 80 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பெண்ணாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, மாரண்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வறட்சி காரணமாக, தற்போது ஒரு சில விவசாயிகளே விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது சிறிய வெங்காயத்தின் வரத்து இல்லாத காரணத்தால் உள்ளுா் சந்தையில் வெங்காயத்தின் விலை பெரிதும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆந்திரா மற்றும் கா்நாடக மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது. இதனால் விலை உயா்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.