வணிகம்

"சிங்கிள்ஸ் டே" ஆன்லைன் விற்பனையில் அலிபாபா சாதனை

jagadeesh

சீனாவின் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா சிங்கிள்ஸ் தினத்தையொட்டி நடத்திய மெகா தள்ளுபடி விற்பனையில் ஒரு மணி நேரத்தில் சுமார் ஒரு லட்சத்து ஆயிரம் கோடி ரூபாய் வரு‌மானம் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

பிரபல தொழிலதிபர் ஜாக் மா தொடங்கிய அலிபாபா நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் 11ஆம் மாதம் 11ஆம் தேதி‌ அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சிறப்பு விற்பனைக்கு 'சிங்கிள்ஸ் டே சேல்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி நேற்று காலை மெகா ஆஃபர்கள் மற்றும் அதி‌ரடி தள்ளுபடிகளுடன் சிங்கிள்ஸ் டே விற்பனை தொடங்கியது. 

விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சத்து ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொருட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40 நிமிடங்கள் வேகமாக ஒரு லட்சத்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று முழுவதும் 'சிங்கிள்ஸ் டே சேல்' நடைபெறவுள்ளது. அலிபாபா நிறுவனத்திலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் ஜேக் மா பதவி விலகியதையடுத்து புதிய தலைவராக டேனியல் சாங் பதவி வகித்து வருகிறார்.