வணிகம்

சரிந்து மீண்டது பங்குசந்தை

சரிந்து மீண்டது பங்குசந்தை

webteam

பட்ஜெட் எதிரொலியாக மும்பை மற்றும் தேசிய பங்குசந்தையில் குறியீட்டெண் கடும் சரிவை சந்தித்துள்ளது.

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். 1.50 நிமிடம் இந்த உரையை அவர் வாசித்தார். இதையடுத்து, மும்பை மற்றும் தேசிய பங்குசந்தையில் குறியீட்டெண் கடும் சரிவை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 374 புள்ளிகள் சரிந்து 35,590இல் வர்த்தகம் இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 115 புள்ளிகள் சரிந்து 10,912இல் வணிகமாகியது. அருண் ஜெட்லி பட்ஜெட்டை ஆரம்பித்தபோது உயர்ந்த பங்குசந்தை பட்ஜெட்டை முடித்தபோது கடும் சரிவை சந்தித்தது. பின்னர் பங்கு சந்தை மீண்டும் எழுந்தது.