வணிகம்

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு : தங்கத்தின் மதிப்பு உயர்வு

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு : தங்கத்தின் மதிப்பு உயர்வு

webteam

பங்குச்சந்தைகள் இன்றைய நேர முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவையொட்டி நிறைவடைந்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றை நேர இறுதியில் 324 புள்ளிகள் சரிந்து 38,277 புள்ளிகளுடன் நிறைவடைந்தன. சதவிகிதத்தின் அடிப்படையில் இது 0.84% ஆகும். அதில் டாடா மோடார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் அதிகபட்ச சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தை மதிப்பீட்டை கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் வெறும் 7 நிறுவனங்களில் பங்குகள் மட்டுமே உயர்வுடன் முடிந்தன.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 50 புள்ளிகள் சரிந்து 11,498 புள்ளிகளுடன் முடிவடைந்தது. இது சதவிகிதத்தின் அடிப்படையில் 0.87% ஆகும். ஆனால் ஐடி நிறுவனங்களின் பங்குகள் மட்டும் உயர்வடைந்தது. மீடியாக்களின் பங்குகள் அதிக பட்சம் சரிந்தன. பிஎஸ்யு வங்கி 2.2% வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டு புள்ளிகளுமே சரிவடைந்த போதிலும், இன்று அட்சய திரிதியை காரணமாக மக்கள் அதிக அளவில் தங்கம் வாங்கிச் சென்றதால், அதன் மதிப்பு உயர்ந்தே காணப்பட்டது.