இந்தியப் பங்குச் சந்தைகள் கணிசமான ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கிய நிலையில் தற்போது சற்று குறைந்து வர்த்தகமாகிறது.
முற்பகல் 12.30 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 250 புள்ளிகள் ஏற்றம் கண்டு 38 ஆயிரத்து 878 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 60 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 444 புள்ளிகளில் வணிகமாகியது.
இன்றைய வர்த்தகத்தில் இண்டஸ் இண்ட் வங்கி, என்.டி.பி.சி, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின.
இந்நிலையில், அந்நிய செலாவணிச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 53 காசுகள் அதிகரித்து 73 ரூபாய் 7 காசானது.