இந்தியாவில் இன்று மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றதன் எதிரொலியாக நிஃப்டி, சென்செக்ஸ் உயர்வுடன் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை நிலவரம் இன்று காலை முதல் மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவின் காரணமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. பின்னர் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்றதால், இந்தியப் பொருளாதாரப் புள்ளிகளும் உயர்வுடன் நிறைவடைந்தது. இன்றைய வர்த்த நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை மதிப்பான சென்செக்ஸ் 21.66 புள்ளிகள் உயர்ந்து 38,607.01 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
அதேசமயம், இந்திய பங்குச் சந்தை மதிப்பான நிஃப்டி 12.40 புள்ளிகள் உயர்ந்து 11,595.70 புள்ளிகளில் முடிவடைந்தது. இன்றைய தினத்தில் வேதந்தா நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு அதிகபட்ச வீழ்ச்சியை சந்தித்து, 3.72% குறைந்தது. அத்துடன் ஆக்ஸிஸ் வங்கி, சன் பார்மா, இன்ஃபோசிஸ், பவர்கிரிட், ஐசிஐசிஐ, டிசிஎஸ், ஹெச்.சி.எல் டெக், டாடா ஸ்டீல், கோடாக் வங்கி, ஹெச்டிஎஃப்சி, இண்டஸ்ஹிந்த் வங்கி மற்றும் மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்கும் 1.46% வீழ்ச்சியடைந்தன.
ஆனால் பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, ஹெச்யுஎல், எண்டிபிசி, ஓஎன்ஜிசி, ஐடிசி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் புள்ளிகள் 2.19% புள்ளிகள் உயர்ந்தன. மேலும், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், தொலைத்தொடர்ந்து நிறுவனங்கள் மற்றும் எரிபொருள் நிறுவனங்களின் புள்ளிகள் 1.11% உயர்ந்து நிறைவடைந்தன. மெடல் மற்றும் ஐ.டி நிறுவனங்கள் 1.18% வீழ்ச்சியடைந்தன.