Digital Gold pt web
வணிகம்

குறைந்த டிஜிட்டல் தங்க விற்பனை.. கவலையில் முதலீட்டாளர்கள்! என்ன காரணம் தெரியுமா?

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் டிஜிட்டல் தங்கத்தின் (Digital Gold) விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளது. என்ன காரணம் என பார்க்கலாம்.

திவ்யா தங்கராஜ்

இந்த மாத தொடக்கத்தில், SEBI டிஜிட்டல் தங்கம் நாட்டில் உள்ள எந்தவொரு அமைப்பாலும் கட்டுப்படுத்தப்படவில்லை என்று முதலீட்டாளர்களை எச்சரித்தது. முன்னதாக,Paytm, PhonePe, Jar, Amazon Pay, Google Pay மற்றும் Tanishq போன்ற கட்டண செயலிகள் மூலம் டிஜிட்டல் தங்க விற்பனை ஆண்டு முழுவதும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரியில் ரூ.762 கோடியாக இருந்த இது செப்டம்பரில் ரூ.1,410 கோடியாக உயர்ந்துள்ளது.

இதனோடு அடுத்து தற்போது, UPI-ஐப் பயன்படுத்தி டிஜிட்டல் தங்கம் வாங்குவது அக்டோபரில் 61 சதவீதம் குறைந்துள்ளது. செப்டம்பரில் ரூ.1,410 கோடி மதிப்புள்ள டிஜிட்டல் தங்கம் விற்கப்பட்ட நிலையில், அக்டோபரில் வாங்கப்பட்ட டிஜிட்டல் தங்கத்தின் மதிப்பு ரூ.550 கோடியாகக் குறைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான சராசரி எண்ணிக்கையும் சுமார் ரூ.951 கோடியாகும்.

பண்டிகை காலமான அக்டோபர் மாதத்தில், அதன் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது, டிஜிட்டல் தங்கத்தின் விற்பனை குறைந்துஇருப்பது ஒரு டிஜிட்டல் சொத்தாகத் தங்கம் மீது முதலீடு செய்வதற்கு என்று முறையான ஒழுங்குமுறை இல்லாதது குறித்து, வாடிக்கையாளர்கள், தொழில் நிறுவனங்கள் (Platforms) மற்றும் பங்குதாரர்கள் (Stakeholders) மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக, இந்தியாவின் பண்டிகைக் காலங்களில், குறிப்பாக அக்‌ஷய திரிதியை, தீபாவளி போன்ற நாட்களில் தங்க விற்பனை உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்த முக்கிய காலத்தில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி, ஒழுங்குமுறை இல்லாததன் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.தொழில் வல்லுநர்கள் கருத்துப்படி, இந்தச் சந்தையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், நீண்ட கால வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், விரைவில் ஒரு வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பைக் கொண்டு வருவது அத்தியாவசியம்.இருப்பினும், டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஜிஎஸ்டி, சேமிப்பு செலவு மற்றும் தளக் கட்டணங்களை உள்ளடக்கியது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.